/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாழை சாகுபடி குறித்து பிரசார இயக்க முகாம்
/
வாழை சாகுபடி குறித்து பிரசார இயக்க முகாம்
ADDED : ஜூன் 17, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில், சாமிபிள்ளை புதுாரில் வாழை சாகுபடி குறித்த, பிரசார இயக்க முகாம் நடந்தது.
அதில், வாழை சாகுபடியில் புதிய ரகங்கள், மானிய திட்டங்கள், சாகுபடி தொழில் நுட்பங்கள், வாழை நுண்ணுாட்டம், வாழையில் வாடல் நோய் தடுப்பு, வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து, தேசிய வாழை ஆராய்ச்சி மைய அலுவலர்கள் சேகர், மாரிமுத்து, அரிஸ்வரர் ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர்.
முகாமில், வேளாண் அறிவியல் மைய வல்லுனர்கள் தமிழ்செல்வி, கவியரசு, தமிழ் செல்வன் மற்றும் 50க்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் பங்கேற்றனர்.