/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீரின்றி வறட்சி நிலவுவதால் கரூரில் கோரை உற்பத்தி பாதிப்பு
/
தண்ணீரின்றி வறட்சி நிலவுவதால் கரூரில் கோரை உற்பத்தி பாதிப்பு
தண்ணீரின்றி வறட்சி நிலவுவதால் கரூரில் கோரை உற்பத்தி பாதிப்பு
தண்ணீரின்றி வறட்சி நிலவுவதால் கரூரில் கோரை உற்பத்தி பாதிப்பு
ADDED : மே 03, 2024 07:17 AM
கரூர் : தண்ணீரின்றி வறட்சி நிலவுவதால், கரூர் பகுதியில் கோரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள் செய்வதறியாது உள்ளனர். கரூர் மாவட்டம் நெரூர், என்.புதுார், சோமூர், திருமக்கூடலுார், வாங்கல், நெரூர் தென்பாகம், ரெங்கநாதன் பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆறு வறண்டு கிடப்பதால் கோரை பயிர் கொஞ்சம், கொஞ்சமாக காய்ந்து வருகிறது.காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நேரங்களில், 1,000 முதல் 1,200 கட்டுகள் வரை அறுவடை செய்யப்படும். ஆனால் தற்போது, 400 கட்டு கோரை மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது. கோரை விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பலர், கட்டட வேலை மற்றும் இதர கூலி வேலைகளுக்கு செல்கின்றனர்.இதுகுறித்து கோரை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், 'காவிரி ஆற்றில் மணல் கொள்ளையால், நிலத்தடி நீர் அதலபாதளத்திற்கு சென்று விட்டது. தற்போது உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட கோரைக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.