/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவனை கடத்தி தாக்குதல்:4 பேர் மீது வழக்கு
/
கல்லுாரி மாணவனை கடத்தி தாக்குதல்:4 பேர் மீது வழக்கு
கல்லுாரி மாணவனை கடத்தி தாக்குதல்:4 பேர் மீது வழக்கு
கல்லுாரி மாணவனை கடத்தி தாக்குதல்:4 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 28, 2025 01:58 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காரணம்பட்டியை சேர்ந்த மாணவன், திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார். சிறுவனின் பெரியப்பா மகள் கோபிகா என்பவரை, செம்பாறைப்பட்டியை சேர்ந்த மோகன் என்பவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, மனம் பிடிக்காமல் திருமணம் செய்து வைத்தனர்.
பின்பு கோபித்துக் கொண்டு கோபிகா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில், கணவன் வீட்டார் கோபிகாவை அழைக்க வந்த போது, கல்லுாரி மாணவன் மீண்டும் உங்களுடன் அக்காவை அனுப்ப முடியாது என தெரிவித்தார். இந்நிலையில் கடந்த, 25ம் தேதி இரவு 9:30 மணியளவில் கோபிகா கணவர் மோகன் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர், மாணவரை கடத்தி தாக்கி, சோளக்காட்டில் விட்டு சென்றனர்.
மாணவர் கொடுத்த புகார்படி, மோகன் உட்பட மூவர் மீது தோகமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.