/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதி இல்லாமல் மனித சங்கிலி மாஜி அமைச்சர் மீது வழக்குப்பதிவு
/
அனுமதி இல்லாமல் மனித சங்கிலி மாஜி அமைச்சர் மீது வழக்குப்பதிவு
அனுமதி இல்லாமல் மனித சங்கிலி மாஜி அமைச்சர் மீது வழக்குப்பதிவு
அனுமதி இல்லாமல் மனித சங்கிலி மாஜி அமைச்சர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 14, 2024 01:26 AM
கரூர்,
கரூரில் அனுமதி இல்லாமல், மனித சங்கிலி போராட்டம் நடத்தியதாக, மாஜி அமைச்சர் உள்ளிட்ட, அ.தி.மு.க.,வினர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்தாத, தி.மு.க., அரசை கண்டித்து, நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும், அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலையில் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அதில், அ.தி.மு.க.,வினர்
பங்கேற்றனர்.
இந்நிலையில், அனுமதி இல்லாமல் மனித சங்கிலி போராட்டம் நடத்தியதாக எஸ்.ஐ., மாரிமுத்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவைத்தலைவர் திருவிகா, கரூர் பஞ்., யூனியன் தலைவர் பாலமுருகன் உள்பட பலர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.