/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குட்கா விற்றவர்கள் மீது வழக்கு பதிவு
/
குட்கா விற்றவர்கள் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 27, 2025 01:34 AM
கரூர், வெவ்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலாயுதம்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., சுபாஷினி தலைமையில்,
போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது புகழூரை சேர்ந்த சிவகாமி, 70, என்பவர் அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிந்தது.
அவரிடமிருந்து, 1,702 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தளவாபாளையத்தை சேர்ந்த மணி, 50, என்பவரும் அதே பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்தார். அவரிடமிருந்து, 10 ஆயிரத்து, 530 ரூபாய் மதிப்புள்ள பல்வேறு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., ரூபினி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, உப்பிடமங்கலத்தை சேர்ந்த சாராசாயீ, 56 என்பவரிடமிருந்து, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.