/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி குடிநீருக்கு குழாய் பதிக்கும் பணி மும்முரம்
/
காவிரி குடிநீருக்கு குழாய் பதிக்கும் பணி மும்முரம்
காவிரி குடிநீருக்கு குழாய் பதிக்கும் பணி மும்முரம்
காவிரி குடிநீருக்கு குழாய் பதிக்கும் பணி மும்முரம்
ADDED : நவ 16, 2025 02:20 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் இருந்து, பள்ளப்பட்டி செல்லும் சாலையில் புதிய காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
அரவக்குறிச்சி முதல் பள்ளப்பட்டி வரை, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட பழைய குழாய்கள் அடிக்கடி வெடித்து, தண்ணீர் வினியோகத்தில் பெரும் தடைகள் ஏற்பட்டது. மேலும் இதனால் தினமும், 2,000 லிட்ட-ருக்கும் மேல் குடிநீர் வீணாகி வந்தது. இதனால் இப்பகுதி மக்கள், குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வந்தனர்.இதை கருத்தில் கொண்டு, பழைய குழாய்களை அகற்றியும், புதிய உயர்தர குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு, அரசு சிறப்பு நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தொடர்புடைய துறை அதிகாரிகள் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்-களை கொண்டு பணிகளை துரிதப்படுத்தினர்.
தற்போது அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் குழி தோண்டும் பணிகள், பழைய குழாய்களை அகற்றுதல், புதிக குழாய்களை பொருத்துதல் ஆகியவை முழு வேகத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த திட்டம் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய குழாய் பதிப்பு முடிந்தவுடன், இப்பகுதி மக்களுக்கு இடையூறு இல்லாத நிலை-யான குடிநீர் வினியோகம் கிடைக்கும் என, அதிகாரிகள் தெரி-வித்தனர்.

