/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றதால் வறண்ட பாலைவனமானது காவிரி
/
தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றதால் வறண்ட பாலைவனமானது காவிரி
தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றதால் வறண்ட பாலைவனமானது காவிரி
தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றதால் வறண்ட பாலைவனமானது காவிரி
ADDED : மே 03, 2024 07:17 AM
கரூர் : காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று போனதால், வறண்ட பாலைவனமாக காட்சியளிக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் உருவாகும் காவிரி ஆறு, 800 கி.மீ., துாரம் ஓடுகிறது. தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று, பூம்புகார் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மழை காலத்தில், பரந்து விரிந்து செல்லும் காவிரி ஆறு, இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதை காணலாம். காவிரி ஆற்றில் இருந்து, கோவில்களுக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து செல்வர். மாதந்தோறும், அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு காவிரி, அமராவதி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில், மேட்டூர் அணையில் குடிநீருக்கு போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், மேட்டூர் அணையிலும் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் மாயனுார் கதவணைக்கு, 350 கன அடி மட்டுமே நீர் வரத்து உள்ளது.
கர்நாடகா அரசு தண்ணீர் தர மறுப்பதால், காவிரி ஆற்றில் தண்ணீரை பார்க்க முடியவில்லை. தற்போது காவிரி ஆற்று பகுதி, தண்ணீரின்றி பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. நீர் மட்டம் சரிந்து, பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.