/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேங்கலில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
/
சேங்கலில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 31, 2024 12:04 AM
கிருஷ்ணராயபுரம்: சேங்கலில், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார்.
இதில் சேங்கல், முத்துரெங்கம்பட்டி, சித்தலவாய் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள மக்களிடம் இருந்து, சிறப்பு முகாமில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தி, தமிழ்நாடு மின்சாரம் வாரியம், சமூக நலன் மகளிர் உரிமை, சுகாதார குடும்ப நலத்-துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்-றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா மற்றும் பஞ்சாயத்து தலை-வர்கள் கலந்து கொண்டனர்.