/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
/
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 15, 2024 02:08 AM
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
கரூர், நவ. 15-
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
பேரணி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி வரை நடந்தது. தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
பின், குழந்தைகள் தின விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மேலும் குழந்தை பாதுகாப்பு, உரிமைகள், குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பான கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
டி.ஆர்.ஓ., கண்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செழியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் சுவாதி உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.