/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு; 356 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு; 356 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு
குழந்தைகள் அறிவியல் மாநாடு; 356 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு
குழந்தைகள் அறிவியல் மாநாடு; 356 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு
ADDED : ஜன 28, 2025 07:09 AM
குளித்தலை: கரூர் தனியார் கல்லுாரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக நடந்த, மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 356 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், 40 கட்டுரைகள் கோவையில் நடைபெறும் மண்டல மாநாட்டிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதில் குளித்தலை அடுத்த, நடுநிலைப்பள்ளி ஆதிநத்தம் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜெய்குமார் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் கவுதம், ஏழாம் வகுப்பு படிக்கும் தரணிஸ்வரன் ஆகியோரின் ஆய்வு கட்டுரை, நீர் பாதுகாப்பு மேலாண்மை என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டு, மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் நாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.