ADDED : அக் 24, 2026 06:49 AM
கரூர்:தமிழ்நாடு
கூட்டுறவு துறை ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட
தலைவர் சதீஷ்குமார் தலைமையில், மண் டல கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,
கூட்டுறவு நிறுவனங்களில் தன்னாட்சி உரிமை மறுப்பு, துணை
விதிகளுக்கு முரணான ஆணைகள் குறித்து கவனிக்க வேண்டும், தரமற்ற
வெங்காய கொள்முதல் மற்றும், 15 சதவீதத்துக்கு அதிகமான அழுகிய
வெங்காயத்தால் ஏற்படும் இழப்பை தவிர்க்க வேண்டும், பார்வையாளர் நேரம்
மதியம், 2:00 மணி முதல், 3:00 மணி வரை என்பதை மீண்டும் தொடர வேண்டும்,
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில்,
வேளாண்மை துறை அமைச்சக பணியாளர் சங்க மாநில செயலாளர் சங்கர், மருத்துவ
துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொருளாளர் கண்ணன், அரசு ஊழியர் சங்க
மாநில துணைத்
தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் உள்பட, பலர் பங்கேற்றனர்.
