ADDED : நவ 20, 2026 03:56 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
அருகே, சேவல் சண்டை நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். நான்கு பேர்
தப்பி சென்றனர். 5 இரு சக்கர வாகனங்கள், 1 சேவல் பறிமுதல்
செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி அடுத்த வெரிச்சனம்பட்டி
பகுதியில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் தோட்டத்தில், சிலர்
அனுமதியின்றி சேவல்களை வைத்து சண்டை நடத்தி, அவற்றின் மீது பந்தயம்
கட்டி, சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது.
இதையடுத்து அரவக்குறிச்சி போலீசார், சம்பந்தப்பட்ட
தோட்டத்திற்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது,
அங்கு சிலர் சேவல்களை வைத்து சண்டை நடத்தி, பந்தயம் கட்டி,
சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது தெரிந்தது. போலீசாரை
கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இதில் பள்ளப்பட்டியை
அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா, 52, என்பவரை போலீசார்
பிடித்து கைது செய்தனர். 4 பேர் தப்பி ஓடினர்.
மேலும், சம்பவ
இடத்தில் இருந்த ஐந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சேவலை போலீசார்
பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நான்கு பேர் யார் என, அரவக்குறிச்சி
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
