UPDATED : நவ 10, 2026 05:21 AM
ADDED : நவ 10, 2026 04:07 AM

அ நிறம் | அளவு
கரூர்; கரூரில் உள்ள கோவை சாலை, பல மாதங்களாக சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர், கோவை சாலையில் தனியார், அரசு பள்ளிகள், ஓட்டல், கூட்டுறவு வங்கி மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், கோவை சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல, பல மாதங்களுக்கு முன், வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது, வேகத்தடையையொட்டியுள்ள சாலை சேதம் அடைந்துள்ளது.அதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, கோவை சாலையில் முனியப்பன் கோவில் அருகே, வேகத்தடை பகுதியில், சேதமடைந்த சாலையை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
