தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/எரியாத சிக்னல் விளக்கு: வாகன ஓட்டிகள் அவதி

எரியாத சிக்னல் விளக்கு: வாகன ஓட்டிகள் அவதி

எரியாத சிக்னல் விளக்கு: வாகன ஓட்டிகள் அவதி


UPDATED : நவ 10, 2026 05:20 AM

ADDED : நவ 10, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 05:20 AM ADDED : நவ 10, 2026 04:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் - ஈரோடு மற்றும் கோவை சாலை பிரிவில், போக்குவரத்து சிக்னல் விளக்கு எரியாமல் சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள்

அவதிப்படுகின்றனர்.

கரூர் - கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் தனியார், அரசு பள்ளிகள், தனியார் வங்கி தலைமை அலுவலகம், காவலர் குடியிருப்பு மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் கோவை, ஈரோடு சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது, அந்த சிக்னல் விளக்குகள் சேதமடைந்துள்ளது.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்து ஏற்படுகிறது. எனவே, கரூர் - கோவை மற்றும் ஈரோடு சாலை பிரிவில், சேதமடைந்து எரியாத நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us