தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/குப்பை மேடாக மாறி வரும் சாலையால் துர்நாற்றம்

குப்பை மேடாக மாறி வரும் சாலையால் துர்நாற்றம்

குப்பை மேடாக மாறி வரும் சாலையால் துர்நாற்றம்


ADDED : நவ 10, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் - கோவை மற்றும் ஈரோடு சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுவதால், அந்த பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால், அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயத்தில், பொதுமக்கள் உள்ளனர்.

சின்ன ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து பகுதியையொட்டி ஈரோடு சாலை உள்ளது. கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், கரூர் நகரை ஒட்டியுள்ளதால், சின்ன ஆண்டாங்கோவில் பஞ்சாயத்து, நகரமாக காட்சியளிக்கும்.கடந்த சில நாட்களாக கோவை சாலையின், மில்கேட் பகுதியில், கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, குப்பை ரோட்டில் சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பலமுறை கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், எந்த பயனும் இல்லை என, மக்கள்

புலம்புகின்றனர்.

மேலும், கரூரில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை சாலையில் உள்ள குப்பை, நனைந்து அழுகும் நிலையில் உள்ளது. எனவே, கோவை சாலையில் உள்ள குப்பையை அகற்ற, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us