/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி ஒன்றியத்தில் குடிநீர் பணிகளை கலெக்டர் ஆய்வு
/
க.பரமத்தி ஒன்றியத்தில் குடிநீர் பணிகளை கலெக்டர் ஆய்வு
க.பரமத்தி ஒன்றியத்தில் குடிநீர் பணிகளை கலெக்டர் ஆய்வு
க.பரமத்தி ஒன்றியத்தில் குடிநீர் பணிகளை கலெக்டர் ஆய்வு
ADDED : மே 09, 2024 06:28 AM
கரூர் : கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூடாமணி, மல்லநத்தம், சின்னதாராபுரம், டி.வெங்கிடாபுரம், புலியம்பட்டி, க.பரமத்தி ஆகிய கிராம பஞ்., பகுதிகளில் குடிநீர் பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.
அதில், எல்லமேடு அருகில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 95 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டியிலிருந்து, கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் வினியோகம் செய்யும் பணி ஆய்வு செய்யப்பட்டது. சின்னதாராபுரம், டி.வெங்கடாபுரம் மற்றும் புளியம்பட்டி குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியிலிருந்து, (சம்ப்) கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் வினியோக பணியையும் ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வீராச்சாமி, உதவி இயக்குனர் சரவணன், உதவி பொறியாளர் மரியாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.