ADDED : ஆக 28, 2026 12:21 AM

அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மா வட்டம், சாலப்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 49. மரம் வெட்டும் தொழிலாளி. இவர், விஸ்வாந்தபுரியை சேர்ந்த ஒருவரிடம், 1.54 லட்சம் ரூபாய் கடன் பெற்று, திருப்பிச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக., 25ல், கந்தசாமி, கல்லுாரியில் படித்த அவரது மகள் கலைவாணி, 23, ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, கடன் கொடுத்த நபர், அக்கம் பக்கத்தினர் முன்னிலையில், தகாத வார்த்தைகளில் இருவரையும் திட்டியுள்ளார்.
மன உளைச்சலுக்கு ஆளான கலைவாணி, வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
