/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சுற்று வட்டாரத்தில் புயல் காரணமாக தொடர்ந்து மழை
/
கரூர் சுற்று வட்டாரத்தில் புயல் காரணமாக தொடர்ந்து மழை
கரூர் சுற்று வட்டாரத்தில் புயல் காரணமாக தொடர்ந்து மழை
கரூர் சுற்று வட்டாரத்தில் புயல் காரணமாக தொடர்ந்து மழை
ADDED : டிச 01, 2024 01:24 AM
கரூர், டிச. 1-
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், புயல் காரணமாக நேற்று தொடர்ந்து மழை பெய்தது.
பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த, இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்துக்கு கன மழை பாதிப்பு குறித்த, அறிவிப்பு இல்லை என்ற நிலையிலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது. காலை முதல் மாலை வரை, கரூர் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
* அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு வாரமாக மழை பெய்து வருவதால், சாலைகளில் நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரராக்கியம், கட்டளை, ரெங்கநாதபுரம், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை, மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, வேங்காம்பட்டி, குழந்தைப்பட்டி ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது. குளிர்ச்சி காரணமாக இயல்பு பணிகளில் ஈடுபட முடியாமலும், குளிரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.