ADDED : டிச 16, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டுமருதுார் காளியம்மன் மற்றும் கிழக்கு காலனி மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, 6:00க்கு அம்ம-னுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் இளநீர், வேப்பிலை, மஞ்சள் நுால், பழங்கள் வைத்து சிறப்பு பூஜை, அபிஷேகம் நடத்தப்பட்-டது.
இதேபோல், பொதுமக்கள் தங்களது வீட்டில் வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம், இளநீர், மஞ்சள் நுால், மாவிளக்கு துள்ளு மாவு வைத்து அபிஷேகம் செய்தனர். பின், மஞ்சள் நுாலை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கையிலும் கட்-டிக்கொண்டனர். இதேபோல், மேட்டு மருதுார் கிழக்கு மாரி-யம்மன் கோவில், வதியம், கண்டியூர், கூடலுார், உள்ளிட்ட கிரா-மங்களில் அம்மனுக்கு குளிர்ச்சி திருவிழா நடந்தது. கிராம மக்கள் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

