ADDED : பிப் 23, 2026 06:29 AM
அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகி-றது.
குறிப்பாக, சின்னதாராபுரம், புளியம்பட்டி, ராஜ-புரம், சீரங்க கவுண்டனுார், வாய்க்காலுார், தொக்-குப்பட்டி புதுார், தொகுப்பட்டி, வெங்கடாபுரம், சாலைப்புதுார், புஞ்சை காளக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில், 100 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பிரதான பயிராக பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக, பருத்தி விளைச்சல் குறைவு மற்றும் சேதாரம் அதிகமாகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.மேலும், இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பருத்தி, அருகிலுள்ள திருப்பூர் மாவட்டம், மூலனுார் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் போக்குவரத்து செலவு அதிகரிப்பதா-கவும், அதன் தாக்கம் விவசாயிகளின் லாபத்தில் குறைவை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்-றனர். 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை பருத்தி, 8,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தற்போதும் நிலவும் சீதோஷ்ணத்தால், எதிர்-பார்த்த வருமானம் கிடைக்குமா? என்ற கவ-லையில் விவசாயிகள் உள்ளனர்.

