ADDED : நவ 04, 2026 07:22 AM

கரூர்:கரூர்
மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் கலாராணி தலைமையில்,
தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மத்திய, மாநில
அரசுகளின் பொருளாதார கொள்கைகளை கண்டித்தும், அரிசி, பருப்பு,
சமையல் எண்ணெய், தானிய பொருட்களின் விலை உயர்வை தடுத்து
நிறுத்தக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட பொருளாளார் நாட்ராயன், ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் வடிவேலன்
உள்பட, பலர் பங்கேற்றனர்.* கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில்,
மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன்,
நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் அரிசி உள்ளிட்ட,
அத்தியவாசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தகோரி
கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநகர செயலாளர்
தண்டபாணி, சி.ஐ.டி.யு., செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர்
பங்கேற்றனர்.
