தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திறந்தபடி வாகனங்களில் செல்லும் வாட்டர் கேன்களால் ஆபத்து

திறந்தபடி வாகனங்களில் செல்லும் வாட்டர் கேன்களால் ஆபத்து

திறந்தபடி வாகனங்களில் செல்லும் வாட்டர் கேன்களால் ஆபத்து


ADDED : ஜூலை 17, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:திறந்த நிலையில், வாகனங்களில் எடுத்து செல்லும் வாட்டர் கேன்களில் வெயில் பட்டால், கேன்சர் ஆபத்து உள்ளது என, நுகர்வோர் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தற்போது வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால், கேன் வாட்டர் விற்பனை என்பது அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில், 4 கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு, கரூர் நிறுவனம் மட்டுமின்றி பிற மாவட்ட நிறுவனங்களின் வாட்டர் கேன்களும் விற்பனை செய்யப்படுகிறது. கேன்களில் அடைத்து, சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சொக்கலிங்கம் கூறியதாவது:வாட்டர் கேன்களில் கட்டாயம், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் பெயர், தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி, காலாவதி தேதி போன்ற எப்.எஸ்.எஸ்.ஐ., பதிவு எண் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில், 10 முதல் 75 மில்லி கிராம் என்ற அளவிலும், மெக்னீசியத்தின் அளவை, 1 லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லி கிராம் என்ற அளவிலும் கட்டாயம் பின்பற்றுவது அவசியம்.

30 முறை மட்டுமே பயன்படுத்தனும்

குடிநீர் கேன்களை, 30 முறை மட்டுமேமறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்ய கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன. மேலும், முழுவதும் மூடப்பட்ட வாகனங்களில் மட்டுமே, வாட்டர் கேன்களை கொண்டு செல்ல வேண்டும். திறந்த நிலையில் உள்ள வாகனங்களில் எடுத்து செல்வதால், வெயில் பட்டு, வேதியியல் மாற்றம் ஏற்படும்.

இதனால், தண்ணீரின் தரம் மாறுபடும். இந்த தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால், 'கேன்சர்' வர வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்

கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செல்வராஜ் கூறுகையில்,''திறந்த நிலையில் உள்ள வாகனங்களில், வாட்டர் கேன்களை எடுத்து செல்லக் கூடாது. அது பற்றி விற்பனையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விரைவில் கூட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us