ADDED : ஆக 09, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:திருச்சி
மாவட்டம், மணப்பாறை அடுத்த அணியாப்பூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை
விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சுகன்யா, 20, தரகம்பட்டியில்
உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்கிறார். கடந்த 6ம் தேதி மாலை 5:30
மணிக்கு கடையை பூட்டி விட்டு, சுகன்யா வீட்டிற்கு செல்லவில்லை. பல
இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
தனது
மகளை காணவில்லை என, ஏழுமலை கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்பட்டி
போலீசார் வழக்கு பதிந்து சுகன்யாவை தேடி வருகின்றனர்.
