ADDED : ஜூலை 12, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
குளித்தலை,:குளித்தலை அடுத்த தொண்டமாங்கினம் பஞ்., பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தங்கம்மாள், 48, விவசாய தொழிலாளி. இவரது மகள் நிர்மலாதேவி, 28, சமையல் வேலை செய்பவர்.
இவரது கணவர் அண்ணாதுரை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.கடந்த 5ம் தேதி ஈரோடுக்கு சமையல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற, நிர்மலாதேவி பின்னர் வீடு திரும்பவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் தங்கம்மாள் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
