ADDED : ஜூலை 17, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அடுத்த மேலசிந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் நீலவேணி, 44, விவசாய கூலி தொழிலாளி. இவரது
மகள் சங்கீதா, 23, எம்.ஏ., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த, 14ம் தேதி மதியம், 2:00 மணியளவில் தாய் நீலவேணி மகாதானபுரம்
கடை வீதிக்கு சென்று விட்டு, வீடு திரும்பினார்.
அப்போது,
வீட்டில் இருந்த சங்கீதாவை காணவில்லை. அவரது மொபைல்போனை தொடர்பு
கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தனது மகளை
காணவில்லை என, நீலவேணி கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார்
வழக்கு பதிவு செய்து சங்கீதாவை தேடி வருகின்றனர்.
