/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாட்டு பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு அலங்காரம்
/
மாட்டு பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு அலங்காரம்
மாட்டு பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு அலங்காரம்
மாட்டு பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு அலங்காரம்
ADDED : ஜன 16, 2025 07:06 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, கால்நடைகளுக்கு துாய்மை பணியுடன் அலங்காரம் செய்யப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சரவணபுரம், கோடங்கிப்பட்டி, மத்திப்பட்டி, புனவாசிப்பட்டி, பஞ்சப்பட்டி, சிவாயம், மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, வீடுகளில் வளர்க்கும் பசு மாடு, கன்றுகள், ஆடுகள் ஆகியவை குளிப்பாட்டப்பட்டு, மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் புதிய கயிறுகள் கட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று மாலை, மாடுகளுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு பூஜை நடத்தப்பட்டது.