/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி பாசன டெல்டா பகுதியில்வேளாண் பல்கலை அமைக்க கோரிக்கை
/
காவிரி பாசன டெல்டா பகுதியில்வேளாண் பல்கலை அமைக்க கோரிக்கை
காவிரி பாசன டெல்டா பகுதியில்வேளாண் பல்கலை அமைக்க கோரிக்கை
காவிரி பாசன டெல்டா பகுதியில்வேளாண் பல்கலை அமைக்க கோரிக்கை
ADDED : செப் 15, 2025 01:58 AM
குளித்தலை: காவிரி பாசன டெல்டா பகுதியான, கரூர், திருச்சி அல்லது தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் பல்கலை அமைக்க வலியுறுத்தி, காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வலையப்பட்டி ஜெயராமன், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
உத்தரபிரதேசத்தில், ஏழு வேளாண் பல்கலை; கர்நாடகா, ராஜஸ்தானில், ஆறு வேளாண் பல்கலை; மஹாராஷ்டிரா, குஜராத்தில், ஐந்து வேளாண் பல்கலைகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரே ஒரு வேளாண் பல்கலை, கோயம்புத்துாரில் மட்டும் தான் உள்ளது. தமிழகத்தில் வேளாண்மை சார்ந்த பட்ட படிப்பு படிக்க ஆண்டுதோறும், 52,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், 4,550 மாணவர்கள் மட்டுமே தமிழக வேளாண் பல்கலைக்கு உட்பட்ட, 14 கல்லுாரி, தனியார் துறையில், 28 கல்லுாரிகளிலும் சேர்க்கப்படுகின்றனர்.
தமிழகத்தில், இரண்டாவது தலைநகரமாக அமைய வாய்ப்பு உள்ள திருச்சியில், புதிதாக வேளாண் பல்கலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். எனவே, புதிதாக தொடங்க இருக்கும் வேளாண் பல்கலை, கரூர் மாவட்டம், குளித்தலை சட்டசபை தொகுதி இனுங்கூரில், மாநில விதைப்பண்ணை வளாகத்தில் உள்ள, 205 ஏக்கர் நிலத்தில் அமைக்கலாம்; அல்லது திருச்சி, லால்குடி தாலுகா குமுளுரில் உள்ள, 272.3 ஏக்கர் நிலத்தில் அமைக்கலாம்; அல்லது திருவெறும்பூர் தாலுகா, திருச்சி விமான நிலையம் அருகிலுள்ள சூரியூர் அல்லது மண்டையூர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் அல்லது தஞ்சாவூரில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள, 124 ஏக்கர் நிலத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.