/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
/
ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில், மாவட்ட தலைவர் பாரதி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில் மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வை மத்திய பா.ஜ., கூட்டணி அரசு ரத்து செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆவண படுகொலையை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உள்பட, 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.