/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.6.34 கோடியில் வளர்ச்சி பணி அமைச்சர் தொடங்கி வைப்பு
/
ரூ.6.34 கோடியில் வளர்ச்சி பணி அமைச்சர் தொடங்கி வைப்பு
ரூ.6.34 கோடியில் வளர்ச்சி பணி அமைச்சர் தொடங்கி வைப்பு
ரூ.6.34 கோடியில் வளர்ச்சி பணி அமைச்சர் தொடங்கி வைப்பு
ADDED : மார் 17, 2025 04:15 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாயத்து பகுதிகளில், புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., பாரி நகரில், 5.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை புனரமைத்தல் பணி, கோவிந்தம்பாளையம் முதல் மொச்சக்கொட்டாம்பாளையம் வரை, 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை புதுப்பித்தல் பணி, ஆண்டாங்கோவில் குடித்தெருவில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படிகட்டுத்துறை அமைக்கும் பணி உள்பட, மொத்தம், 6.34 கோடி ரூபாயில், 27 சாலைப்பணி, குடிநீர் திட்டப்பணிகளை துவக்கி வைத்து முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஊராட்சி-களின் உதவி இயக்குனர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.