ADDED : ஜூலை 20, 2026 05:26 AM
கரூர்,:க.பரமத்தி
ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை,
கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு மேற்கொண்டார்.
இதில்,
விஸ்வநாதபுரி பஞ்சாயத்தில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை.
மருத்துவமனையின் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் மருந்து
இருப்பு நிலை ஆகியவை குறித்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன்
கேட்டறிந்தார். பவித்திரம் பஞ்.,ல் உள்ள கால்நடை மருத்துவமனை
மற்றும் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு நாள்தோறும் வருகை தரும்
கால்நடைகளின் எண்ணிக்கை, மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள்
ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும், 7.35 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வரும்
பராமரிப்பு பணிகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக
அமைக்கப்பட்டு வரும் சமுதாய நல கூடத்தை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து
முன்னுார் பஞ்.,ல், 13.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும்
சிறிய சமுதாய நலக்கூடம், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும்
நாடக மேடை உள்பட, 64.10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வளர்ச்சித்
திட்டப்
பணிகளை கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு செய்தார்.
