sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெருமாளுக்கு சகோதரி சீர்வரிசை வழங்கிய பக்தர்கள்

/

பெருமாளுக்கு சகோதரி சீர்வரிசை வழங்கிய பக்தர்கள்

பெருமாளுக்கு சகோதரி சீர்வரிசை வழங்கிய பக்தர்கள்

பெருமாளுக்கு சகோதரி சீர்வரிசை வழங்கிய பக்தர்கள்


ADDED : அக் 12, 2025 03:13 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும். ஆயிரக்கணக்கான பக்-தர்கள் தரிசனம் செய்து செல்வர். நடப்பாண்டு புரட்டாசி சனிக்கி-ழமை நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியருளினார். இதையொட்டி ஆஞ்ச-நேயருக்கு வடமாலை சாற்றப்பட்டது.

அதேசமயம் ஆண்டுதோறும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழ-மையன்று, பெருமாளின் சகோதரியான கோட்டை பத்ரகாளி-யம்மன் கோவிலில் இருந்து சீர் வரிசைகளாக பூ, பழம், இனிப்பு மற்றும் கார வகைகள் அனுப்பி வைக்கப்படும்.இதன்படி கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து பெருமாளுக்கு சீர்

வரிசையை பக்தர்கள் ஊர்வலமாக நேற்று மாலை எடுத்து சென்-றனர்.

நடப்பாண்டு, 17ம் ஆண்டு சீராக, இனிப்பு, பழங்கள், ஆபர-ணங்கள், உடை, பூ என, 200க்கும் மேற்பட்ட தட்டுகளில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து, கஸ்தூரி அரங்கநாதர் கோவில் மூலவருக்கு படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us