/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை; கலெக்டர் தகவல்
/
கரூர் ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை; கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 06, 2025 01:43 AM
கரூர், கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும், 31 வரை நேரடி சேர்க்கை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. மகளிருக்கு மட்டும் தையல் தொழில்நுட்ப பயிற்சி, கணினி தொழில்நுட்ப பயிற்சி ஓராண்டும், மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு ஓராண்டு படிப்பு, ஆப்ரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் இரண்டு ஆண்டு படிப்பாகவும் கற்றுத் தரப்படுகிறது. இதில், தையல் தொழில்நுட்ப பயிற்சி, 8ம் வகுப்பு தேர்ச்சி, மற்ற படிப்புகளுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, சைக்கிள், வரைபடக்கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி ஆகியவை வழங்கப்படும். கூடுதல் விபரங்களை, கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களில், 4324-222111, 9499055711, 9499055712 அல்லது நேரில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை, 31.
இவ்வாறு கூறியுள்ளார்.