UPDATED : அக் 27, 2026 07:57 AM
ADDED : அக் 27, 2026 05:27 AM

கரூர்: கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், வெள்ள பேரிடர் மீட்பு உபகரணங்களை எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம-டைந்து, கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி-களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாக்-கவும், அவசர மீட்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடு செய்-யப்பட்டுள்ளன. வெள்ளக் காலங்களில் மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக வெட்டி அகற்-றுவதற்கான நவீன மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மின்சாரம் மற்றும் விளக்கு வசதி, இரவு நேர மீட்பு பணிகளுக்குப் பயன்படும் அதிந-வீன தேடுதல் விளக்கு, மீட்பு பணியில் ஈடுப டும் போலீசாருக்கான பாதுகாப்பு உடைகள், மிதவை ஆடைகள் மற்றும் கயிறுகள் உள்ளி ட்ட, உபகர-ணங்களை ஆயுதப்படை வளாகத்தில் எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டார்.
மேலும், மீட்பு பணிகளுக்கான அனைத்து உபகர-ணங்களும் எந்நேரமும், தயார் நிலையில் இருக்க வேண்டும் என, ஆயுதப்படை அதிகாரிக-ளுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். தொடர்ந்து, வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீசாருக்கு ஆலோசனை வழங்-கப்பட்டது.
