/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : டிச 31, 2025 06:12 AM
குளித்தலை: குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், நேற்று மதியம், 12.30 மணிக்கு, பத்திர பதிவுத்-துறை தலைவரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, கணினி பதிவுகளை ஆய்வு செய்தார். மேலும், தீர்வு காணப்பட்ட மனுதாரரின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, நடவ-டிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது, தங்க-பொண்ணு என்பவர், 'பட்டா மாற்றம் சம்பந்தமாக மனு கொடுத்தேன், உரிய நடவடிக்கை எடுக்கப்-பட்டது' என, தெரிவித்தார்.
குளித்தலை தாசில்தார் இந்துமதி, துணை தாசில்தார்கள் நீதிராஜன், தீபத்திலகை, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஜெயவேல்காந்தன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் வெங்கடேஷ், மகளிர் உரிமை திட்டம் தனி தாசில்தார் மதிய-ழகன் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவ-லர்கள் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள் உட-னிருந்தனர்.