/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
/
கிருஷ்ணராயபுரத்தில் தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
கிருஷ்ணராயபுரத்தில் தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
கிருஷ்ணராயபுரத்தில் தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
ADDED : ஆக 09, 2025 02:03 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரத்தில், அரசின் நான்காண்டு சாதனை தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
தி.மு.க., நகர செயலர் சசிக்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நான்காண்டு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் கிடைக்கும் வகையில்
செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பஸ் வசதி, பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு நிதி உதவி, விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் இதர கடன் உதவிகள் வழங்கப்படுகிறது என பிரசாரம் செய்யப்பட்டது.
மேற்கு ஒன்றிய செயலர் ரவிராஜா, டவுன் பஞ்., தலைவர் சேதுமணி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம் உள்பட நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.