/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழாய் வால்வில் வெளியேறும் குடிநீர்; பைப் அமைக்க மக்கள் கோரிக்கை
/
குழாய் வால்வில் வெளியேறும் குடிநீர்; பைப் அமைக்க மக்கள் கோரிக்கை
குழாய் வால்வில் வெளியேறும் குடிநீர்; பைப் அமைக்க மக்கள் கோரிக்கை
குழாய் வால்வில் வெளியேறும் குடிநீர்; பைப் அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : மார் 06, 2024 06:31 AM
கரூர், : கரூர் அருகே, குழாயில் அமைக்கப்பட்டுள்ள வால்வில் இருந்து, குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் பைப் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், நெரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெரூர் அக்ரஹாரம் அருகே, குடிநீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள வால்வில் இருந்து, குடிநீர் வெளியேறி வருகிறது. இதை அப்பகுதி பொதுமக்கள், துணிகளை வைத்து வடிகட்டி பிடித்து செல்கின்றனர்.
சில நேரங்களில் குடிநீர் வால்வில் இருந்து, விடிய விடிய குடிநீர் சாக்கடை கால்வாயில் செல்கிறது. இதனால், வால்வை சீரமைக்ககோரி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் பயனில்லை. எனவே, வால்வில் இருந்து வெளியேறும் குடிநீர் வீணாவதை தடுக்க, பைப் அமைத்தால், தண்ணீர் பிடிக்க வசதியாக இருக்கும் என, அப்பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.