sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு கல்வி உதவித்தொகை

/

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு கல்வி உதவித்தொகை

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு கல்வி உதவித்தொகை

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு கல்வி உதவித்தொகை


ADDED : டிச 05, 2024 07:53 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தாய், தந்தை இழந்தோர் ஆகிய, 98 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்ப-டுகிறது.

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.

பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும், 16 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும்

பரிசோதனை மையங்களில் இலவச எச்.ஐ.வி., பரிசோ-தனை, 16 சுகவாழ்வு மையங்களில் பால்வினை நோய்

குறித்த பரி-சோதனை, உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி

மருத்துவமனையில், இலவச ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மையம் செயல்பட்டு வருகி-றது. இதில், 2,601 பேர்

சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அந்த நோயால் தாய், தந்தை

இழந்தோர் என பள்-ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்-தொகை வழங்கப்பட்டு

வருகிறது. 2023-2024ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை, 98 குழந்தைகளுக்கு, 2.94 லட்சம் ரூபாய்-

வழங்கப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டில், 139 குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு

வருகிறது. மேலும் சிகிச்சை எடுத்து வருவோருக்கு போக்குவரத்து வசதிக்கு ஏற்ற-வாறு, இணை ஏ.ஆர்.டி.

சிகிச்சை மையங்கள் குளித்தலை, வேலாயுதம்பாளையம், மையிலம்பட்டி, பள்ளப்பட்டி அரசு

மருத்-துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் லோகநாயகி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு

அலுவலர் சுமதி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us