/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒரே வாரத்தில் ரூ.10 சரிந்து கத்திரிக்காய் விற்பனை
/
ஒரே வாரத்தில் ரூ.10 சரிந்து கத்திரிக்காய் விற்பனை
ADDED : நவ 19, 2025 02:45 AM
கிருஷ்ணராயபுரம், நவ. 19
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் கத்திரிக்
காய் விலை சரிந்து விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவக்குளம், தாரா
புரத்தனுார், சேங்கல், புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, சரவணபுரம், கொம்பாடிப்பட்டி, நரசிங்கபுரம், பஞ்சப்பட்டி, புதுப்பட்டி, லட்சுமணம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது கத்திரிக்காய்கள் பறிக்கப்பட்டு மார்க்கெட் மற்றும் வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் கத்திரிக்காய் கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது. நேற்று நடந்த
விற்பனையில் கிலோவுக்கு, 10 ரூபாய் சரிந்து, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

