ADDED : அக் 27, 2026 05:30 AM
கரூர்: கரூர் அருகே நெரூர் பிரிவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர் - வாங்கல் சாலை, நெரூர் பிரிவில் சமீ-பத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழி-யாக கரூரில் இருந்து, நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், கரூர் - வாங்கல் சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் நடந்தன. தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, நெரூர் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், நெரூர் பிரிவு சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கி இருந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வந்தனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியா-னது. இதையடுத்து, வாங்கல் விரிவாக்க சாலையில், நெரூர் பிரிவு ரவுண்டானாவில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்கு பொருத்தப்பட்டு, போக்குவரத்து சிக்னல் விளக்குகளும் அமைக்-கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்-ளனர்.
