/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பை மேடாக மாறி வரும் ஈரோடு சாலையால் அவஸ்தை
/
குப்பை மேடாக மாறி வரும் ஈரோடு சாலையால் அவஸ்தை
ADDED : அக் 26, 2024 06:28 AM
கரூர்: கரூர், ஈரோடு சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படு வதால், அந்த பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால், தொற்று பரவும் அபா-யத்தில் மக்கள் உள்ளனர்.
கரூர், ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதி உள்ளது. கிராம பஞ்சாயத்து பகுதியாக இருந்-தாலும், கரூர் நகரை ஒட்டியுள்ளதால், நகரமா-கவே தெரியும். கடந்த சில நாட்களாக ஈரோடு சாலையின், இருபுறமும் கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, குப்பை சாலையில் சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்-றனர். பலமுறை, கிராம பஞ்சாயத்து நிர்வாகத்-திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என, பொதுமக்கள் புலம்புகின்றனர்.
மேலும், கரூரில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு சாலையில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கவர்கள் நனைந்து அழுகும் நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
எனவே, ஈரோடு சாலையில் உள்ள, வேலுசாமிபு-ரத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்ற, சம்பந்-தப்பட்ட ஆண்டாங்கோவில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.