/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க எதிர்பார்ப்பு
/
கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க எதிர்பார்ப்பு
கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க எதிர்பார்ப்பு
கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 08, 2024 11:35 AM
கரூர்; கரூர் அருகே, திருச்சி ரயில்வே வழித்தடத்தில் பெரிய அளவிலான, குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில், கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டது. ஒருபுறம் காவிரியாறு, மறுபுறம் கிளை வாய்க்கால்கள் மற்றும் சாலைகள் இடையே, கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடம் செல்கிறது. இதனால், இரட்டை ரயில்வே வழித்தடம் அமைக்க முடியாத நிலையில் கடந்த, 2019ல் தான், கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடம் மின் மயமாக்கப்பட்டது.
இதனால், அந்த ரயில்வே வழித்தடத்தில் பசுபதி
பாளையம், சணப்பிரட்டி, லாலாபேட்டை உள்ளிட்ட பல இடங்களில், கேட்டை நிரந்தரமாக மூடும் வகையில் புதிதாக குகை வழிப்பாதை தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிகளவில் வாகனங்கள் செல்லும் கட்டளை சாலை ரயில்வே கேட் பகுதியில், சிறிய அளவிலான குகை வழிப்பாதையில், டூவீலர்கள் மட்டும் செல்ல முடியும். அந்த பாதையும் முட்புதராக உள்ளது. அதில், கனரக வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், திருச்சி தேசிய நெடுஞ்
சாலையில் இருந்து கட்டளை, ரங்கநாதபுரம், கீழ்மாயனுார், மாயனுார் பகுதிகளுக்கு, வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், அடிக்கடி ரயில்கள் செல்லும்போது காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, கட்டளை பகுதியில் இருந்து மாயனுார் கதவணை சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு, பொதுமக்கள் எளிதாக சென்றுவிட முடியும். ஆனால், கட்டளை சாலையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
எனவே, கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடம் கட்டளை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், பெரிய அளவிலான குகை வழிப்பாதையை அமைக்க, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.