/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி அம்மாபட்டியில் பண்ணை பயிற்சி முகாம்
/
க.பரமத்தி அம்மாபட்டியில் பண்ணை பயிற்சி முகாம்
ADDED : டிச 22, 2024 01:18 AM
கரூர், டிச. 22-
க.பரமத்தி அருகில், அம்மாபட்டியில் வேளாண்துறை சார்பில் பண்ணை பயிற்சி முகாம் நடந்தது.
க.பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வி தலைமை வகித்தார். நுண்ணீர் பாசனம், மானிய விலையில் சோளம் விதை வழங்குதல், தாவர பூச்சி விரட்டிகளான ஆடாதோடா மற்றும் நொச்சி நாற்றுகள் வினியோகம் செய்வது, முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும் விரிவாக விளக்கினார்.
கரூர் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ஜெயபாரதி, உயிர் வேளாண், ஒருங்கிணைந்த பண்ணையம், மண்வள மேலாண்மை மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் பற்றி கூறினார். கரூர் வேளாண் அறிவியல் மைய புழுதேரி தொழில்நுட்ப வல்லுனர் சரவணன், கறவை மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்க தொழில்நுட்பங்கள், தடுப்பூசி அட்டவணை, புதிய ரக தீவன மேலாண்மை ஆகியவை குறித்து பேசினார். கால்நடை உதவி மருத்துவர் சண்முகவடிவு, கால்நடை பராமரிப்பு பற்றியும், உதயமித்ரா திட்டத்தை பற்றியும் தெரிவித்தார்.
முகாமில், க.பரமத்தி தோட்டக்கலை உதவி அலுவலர் சத்தியவேணி உள்பட பலர் பங்கேற்றனர்.