/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காற்றுக்கு 500 ஏக்கர் மக்காச்சோள பயிர் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
காற்றுக்கு 500 ஏக்கர் மக்காச்சோள பயிர் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
காற்றுக்கு 500 ஏக்கர் மக்காச்சோள பயிர் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
காற்றுக்கு 500 ஏக்கர் மக்காச்சோள பயிர் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 13, 2025 05:11 AM
தலைவாசல்: சூறைக்காற்றுக்கு, 500 ஏக்கருக்கு மேற்பட்ட மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்ததால், இழப்பீடு வழங்க விவசாயிகள் வலி-யுறுத்தினர்.
சேலம் மாவட்டம் தலைவாசல், ஆத்துார், அதன் சுற்றுப்பகுதி-களில் நேற்று முன்தினம் மதியம், 2:00 முதல், மாலை, 4:00 மணி வரை, சூறாவளி காற்று வீசியது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதில் வெள்ளையூர், பகடப்பாடி, கவர்பனை, பின்னனுார், கிழக்குராஜாபாளையம், புளியங்குறிச்சி, திட்டச்-சேரி, சிறுவாச்சூர், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை, சதாவசி-புரம், அம்மம்பாளையம், கல்லாநத்தம் உள்ளிட்ட இடங்களில், 500 ஏக்கருக்கு மேற்பட்ட அளவில் மக்காச்சோள பயிர்கள் முறிந்து விழுந்தன. கதிர்கள் பிடித்துள்ள நிலையில், பயிர்கள் விழுந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். பாதிப்பு ஏற்-பட்ட இடங்களில், வேளாண் அலுவலர்கள், கள ஆய்வு மேற்-கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து தலைவாசல் விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஜன-வரி, பிப்ரவரியில் விதை நடவு செய்த மக்காச்சோள செடிகள், 95 முதல், 100 நாள் பயிராக உள்ளன. கதிர்கள் பிடிக்கும் நேரத்தில் காற்றுடன் பெய்த மழையில், மக்காச்சோள பயிர்கள் கதிருடன் முறிந்து விழுந்தன. அறுவடைக்கு, 20 நாளே உள்ள நிலையில், மக்காச்சோளம் அதிகளவில் சேதம் அடைந்துள்ளது.
ஏக்கருக்கு, 10,000 முதல், 20,000 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்-பட்டுள்ளது. வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் சங்கரய்யா கூறு-கையில், ''சூறாவளி
காற்றுடன் பெய்த மழையில் தலைவாசல் வடக்கு, தெற்கு பகு-தியில், 1,000 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம், மரவள்ளி, நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. கோடை கால பயிர்களுக்கும் இன்-சூரன்ஸ் பதிவு செய்து வழங்க வேண்டும். ஒரு பகுதி முழுதும் பாதிப்பு இருந்தால், இழப்பீடு வழங்கும் முறையை தவிர்த்து, ஒரு விவசாயி பாதித்தாலும், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை கால சூறாவளி காற்றில் பாதிக்கப்-பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவ-டிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.தலைவாசல் வேளாண் அலு-வலர்கள் கூறுகையில், 'ஆய்வு செய்து வருகிறோம். அதன் அறிக்கை, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்படும்' என்றனர்.
வாழை மரங்கள்
அதேபோல் இடைப்பாடி, பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி உள்-ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. இதனால் பல இடங்களில் சாலையோர மரங்கள், வீடுகள் முன்-புறம் இருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தன. குறிப்பாக பில்லுக்-குறிச்சியில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில், 200க்கும் மேற்பட்ட மரங்கள் உடைந்து நாசமாயின. அடுத்த மாதம் வெட்டும் நிலையில் இருந்த, 200க்கும் மேற்-பட்ட தேன்வாழைத்தார்கள் சேதமடைந்தன. அதேபோல் பல இடங்களில் காற்றால், விவசாய பயிர்கள் சேதமடைந்தன.