/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூக்கள் விலை உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி
/
பூக்கள் விலை உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 02, 2025 01:34 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், செக்கணம், எழுதியாம்பட்டி, மாயனுார், சேங்கல், முனையனுார், புதுப்பட்டி, தாளியாம்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில் சிறப்பு பூஜை நடந்து வருவதால், பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
விரிச்சிப்பூக்கள் கிலோ, 60 ரூபாயில் இருந்து, 100 ரூபாய், சின்ன ரோஜா கிலோ, 100 ரூபாயிலிருந்து, 200 ரூபாய், செவ்வந்தி பூ கிலோ, 200 ரூபாயில் இருந்து, 300 ரூபாய், மல்லிகை பூக்கள் கிலோ, 400 ரூபாயில் இருந்து, 600 ரூபாய், செண்டுமல்லி கிலோ, 40 ரூபாயில் இருந்து, 70 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.