/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி பகுதியில் மிதமான மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
/
க.பரமத்தி பகுதியில் மிதமான மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
க.பரமத்தி பகுதியில் மிதமான மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
க.பரமத்தி பகுதியில் மிதமான மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 21, 2025 01:15 AM
கரூர் :க.பரமத்தி பகுதியில், மிதமான மழை பெய்ததால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை சுற்றியுள்ள பகுதிகளில், சில நாட்களாக, 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு கோடை போல வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாலையில் குளிர்ந்த காற்று வீசியதோடு மழை பெய்துள்ளது.
இதனால், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது பெய்த மழையால், மானாவாரியில் சாகுபடி செய்த எள், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய ஆயத்தமாக வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவு பணிகள் தொடங்க வசதியாக இருக்கும்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது விதைப்பு செய்வதால், பயிரின் வளர்ச்சி தருணத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் வாய்ப்புள்ளது. கால்நடைகளின் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவன தேவைக்காக மானாவாரியாக சோளம் விதைப்பு செய்கிறோம்,' என்றனர்.