ADDED : நவ 08, 2026 06:31 AM
கரூர்:கரூர்
அருகே உள்ள நெரூர் வடபாகம் கிராமத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில்
வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை திட்டத்தின் கீழ் தென்னையில் உரம்
மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
இதில்,
வேளாண்மை கல்லுாரி பேராசிரியர் பத்மாதேவி பங்கேற்று, தென்னை
மரங்களில் முறையான உர பயன்பாடு, நோய் தடுப்பு மற்றும் பூச்சி மேலாண்மை
முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.தொடர்ந்து,
தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெகன் கலந்துகொண்டு தோட்டக்கலைத்துறை
மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள்,
மானியங்கள் மற்றும் அவற்றை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும்
வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். தோட்டக்கலை அலுவலர் ஸ்ரீ
சந்தியா, தோட்டக்கலை உதவி அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர்
பங்கேற்றனர்.
