/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையம் அருகே தோட்டத்தில் தீ விபத்து
/
வே.பாளையம் அருகே தோட்டத்தில் தீ விபத்து
ADDED : ஆக 02, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, விவசாய தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழூர் பாரதி நகரை சேர்ந்தவர் செந்தில் குமார், 45; விவசாயி. இவரது தோட்டத்தில், காய்ந்த மரங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில், நேற்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
அப்போது, காற்று பலமாக வீசியதால் தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால், செந்தில் குமார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, புகழூர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, வேலாயுதம் பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.