/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடகனாறு ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
/
குடகனாறு ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
ADDED : நவ 21, 2024 06:38 AM
அரவக்குறிச்சி: குடகனாறு அணையில் இருந்து, உபரி நீர் திறந்து விடப்படும் என்பதால், ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்ச-ரிக்கை விடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், அழகாபுரி கிராமம், குடகனாறு அணையின் நீர்மட்டம், 26 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு, 160 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், அணையின் உபரி நீர் எப்போது வேண்டுமானாலும் திறந்து விடப்படும் என்பதால், குடகனாறு கரையோரம் இருக்கும் அரவக்குறிச்சி, கூம்பூர், ஈச-நத்தம், ஆர்.வெள்ளோடு, திருக்கோர்ணம் உள்ளிட்ட கிராமங்க-ளுக்கு, மூன்றாம் முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்-பட்டுள்ளது.
இத்தகவலை. குடகனாறு அணை பிரிவின் உதவி பொறியாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

