/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவகர் பஜாரில் தரை கடைக்கு அனுமதி கூடாது:
/
ஜவகர் பஜாரில் தரை கடைக்கு அனுமதி கூடாது:
ADDED : அக் 20, 2024 01:23 AM
ஜவகர் பஜாரில் தரை கடைக்கு அனுமதி கூடாது: மாவட்ட வர்த்தக கழகம் அமைச்சரிடம் மனு
கரூர், அக். 20-
ஜவகர் பஜாரில் தரைக்கடை அமைக்க அனுமதி வழங்க கூடாது என, கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் ஜவகர் பஜாரில் வியாபாரம் தங்கு தடையின்றி நடத்திட, அங்கு திடீர் தரைக்கடைகளை அமைவதை தடுத்திட வேண்டும். ஜவகர் பஜார் சாலையோரம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்கள், பண்டிகை காலத்தில் தரைக்கடை அமைக்கின்றனர். இதனால், சாலை அடைக்கப்பட்டு, கூட்ட நெரிசல் காரணமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்ஸ் சேவை ஆகிய வாகனங்கள் செல்ல தடையாக உள்ளது.
உள்ளூர் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஜவகர் பஜாருக்கு பதிலாக வேறு பகுதியில் தரைக்கடை அமைக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் வர்த்தகம் செய்யக்கூடிய பொதுமக்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதியாக கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான, திருவள்ளுவர் மைதானத்தில் வாகனம் நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.