/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை உயர்வு
/
தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை உயர்வு
தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை உயர்வு
தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை உயர்வு
ADDED : நவ 18, 2025 01:27 AM
கரூர், தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, பூக்கள் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக, நாள்தோறும் மழை பெய்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி நடக்கும், காவிரியாற்று பகுதிகளான கரூர், கிருஷ்ண ராயபுரம், குளித்தலை வட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.மேலும் நாமக்கல், திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, கரூருக்கு நாள்தோறும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தொடர் மழை, கார்த்திகை மாத பனிப் பொழிவு காரணமாக, பூக்கள் சாகுபடி குறைந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் கார்த்திகை மாதம், சபரிமலை சீசன் துவங்கியதால் கரூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் ஒரு கிலோ மல்லிகை பூக்கள், 800 ரூபாய் வரை விற்றது. தற்போது, 1,000 ரூபாய் முதல், 1,200 ரூபாய் வரை விற்கிறது. முல்லை பூ, 400 ரூபாயில் இருந்து, 500 ரூபாய், அரளி, 80 ரூபாயில் இருந்து, 120 ரூபாய், சம்பங்கி, 60 ரூபாயில் இருந்து, 80 ரூபாய், ரோஜா, 150 ரூபாயில் இருந்து, 200 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது.
அதேபோல் துளசி, மரிக்கொழுந்து, சாமந்தி, கோழிக்கொண்டை பூக்கள் விலைகளும் கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

